கோடை/குளிர் காலத்தில் சருமம் வறட்சியை போக்கும் வெண்ணெய் மசாஜ்......!!!

Beauty tips


கோடை/குளிர் காலத்தில் சருமம் வறட்சியை போக்கும் வெண்ணெய் மசாஜ்......!!!

 

வெண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் இதில் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால், அது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

கோடை காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். அதனுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சரும பளபளப்பை தக்க வைத்துக்கொள்ளலாம்.

* சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு விரைவில் குணமாகும்.

* சிறிதளவு வெண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.

* 2ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

* வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். முகத்தில் மென்மையாக தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.

* சிறிது வெண்ணெய், பாதாம் பருப்பு ஒன்று, சிறிது எலுமிச்சை சாறு காலந்து நன்கு அரைக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற விட வேண்டும். பின்னர் பஞ்சை பாலில் நனைத்து அதை முகத்தைச் சுற்றி தடவி, பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும். 


உதட்டின் வறட்சியை தடுக்க இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவி வந்தால் உதட்டின் வறட்சி போக்கி மிக மென்மையாக காணப்படும்.

உதடு கருமை நீங்க போக்க சிறிதளவு தண்ணீரில் குங்கும பூவை போட வேண்டும். குங்கும பூ முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர வேண்டும். பின் உதடு பளபளக்கவும்.


* சருமத்திற்கு போடும் மாய்ஸ்சரைசேருடன் 2 துளி ஜெரனியம் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். அந்த கலவையை கண்களை சுற்றியுள்ள பகுதியில் தடவவும். 15 நிமிடம் கழித்து ஈர துணியால் அந்த கலவையை அகற்றவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வரலாம். இவற்றை பயன்படுத்தி அழகான இளமையான பளிச்சென்ற கண்களை பெற்று வயது முதிர்வை தடுக்கலாம்.

* சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ஒரு  ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

* 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

* தேயிலை மர எண்ணெய் தேயிலை தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இதிலுள்ள கிருமிக்கு எதிராக செயல்படும் குணம் கூந்தலில் உண்டாகும் பொடுகு, தொற்று, ஆகிய்வற்றை அழித்து கூந்தலை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

*தேங்காய் எண்ணெயுடன் தேயிலை மர எண்ணெய் சில துளி கலந்து தலையில் வாரம் ஒருமுறை தடவி வந்தால் முடி உதிர்தல் நிற்கும். இது கூந்தலுக்கு போஷாக்கு அளிக்கும். பிசுபிசுப்பு, பொடுகு ஆகிவய்ற்றை போக்கச் செய்து நீளமாக வளர தூண்டும்.

*குளிர் விரைவில் குணமாகும் வெண்னெயுடன் ஆரஞ்சு கலந்துர, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மெயாகும்.