சர்க்கரை நோய்க்கு சிறந்த மூலிகை மருத்துவ குறிப்புகள்........!

Health tips
சர்க்கரை நோய்க்கு சிறந்த மூலிகை மருத்துவ குறிப்புகள் :


சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்ச்சிதை மாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும். சர்க்கரை நோயின்  மற்றொரு பெயர் நீரிழிவு நோய்.

*இந்தியாவில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

*தேவையான இன்சுலினை  உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்.  சர்க்கரை நோய் இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் இரு வகைகளாக காணப்படுகின்றன:-
முதலாவது  வகை:

 • குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு இந்த  நீரிழிவு, நோய் எதிர்ப்பு அமைப்பு தொடர்புடைய நோயாகும்.

 • இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. சுமார் 10 சதவீத மக்கள் இந்த முதலாவதுவகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

 • கர்ப்பக் கால நீரிழிவானது இரண்டு சதவீதம் முதல் நான்கு சதவீதமான பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும்

இரண்டாவது வகை:

 • நீரிழிவு மோசமான உணவு பழக்கத்தால் ஏற்படும் நோயாகும். உடலிலுள்ள கொழுப்பு இன்சுலின் செயல்படுவதை பாதிக்க செய்கிறது.இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது.

 • இரண்டாவது வகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள்.

 • உடலில் ஏற்படும் மாற்றங்கள், சில அறிகுறிகள் இருந்தால் அது சர்க்கரை  நோயின் அறிகுறிகள் இருக்கலாம்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:-


1. எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான்.

2. சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும்.

3. சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு தோன்றுவது வழக்கம்.

4. வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்.

திரும்ப திரும்ப சருமம் ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்

பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல் உண்டாகிறது.

5. புறநரம்பு மண்டல கோளாறு காரணமாக, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மேற்புற சருமம் வறட்சியடைந்து அரிப்பு ஏற்படும்.

6. நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

7. கண் பார்வை குறைவை உண்டாக்கும்.

8. உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது.

9. அதிகமாக சோர்வடைவது.

10. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும்.

11.உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கும், உடல்பருமன் அதிகரித்து அதை கவனத்தில்கொள்ளாமல் இருப்பவர்களுக்கும் சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோயின் உணவு கட்டுபாட்டு முறைகள்:-
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

நார்ச்சத்து :

 • நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவுகிறது.

 • காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பயிர்கள், உலர்ந்த பருப்பு வகைகள் இவற்றில் நார்ச்சத்து உள்ளது. ஆனால், அசைவ உணவு வகைகளில் நார்சத்து இல்லை. நார்ச்சத்தின் அளவு முழு தானியங்களிலும், பழங்களிலுள்ள உட்புறத்தைவிட தோலிலும் அதிகமாக உள்ளது.

 • சர்க்கரை இல்லாத காபி, டீ அளவோடு சாப்பிடவும்.

காய்கறிகள்:

 • கேரட், பீட்ருட் தவிர்த்து மற்ற காய்கறிகளை சாப்பிடலாம். எல்லா கீரை வகைகளையும் சாப்பிடலாம்.

பழங்கள்:

 • ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு,மாதுளை, சாத்துக்குடி,ப்ளூபெர்ரி, பப்பாளி, அவகேடோ, கிரான்பெர்ரி, ராஸ்ப்பெர்ரி, கிரேப்ஃபுரூட் போன்ற பழ வகைகளையும் சாப்பிடலாம்.

எண்ணெய்

 • சூரிய காந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய்களை சமைலுக்கு பயன்படுத்தலாம்.

தானியங்கள்:

 • கைக்குத்தல் அரிசி, தவிடு நீக்காத கோதுமை மாவு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், து.பருப்பு, பாசிபயறு, உளுத்தம்பருப்பு, காராமணி  போன்றவற்றை சாப்பிடலாம்.

கீரைகள் :

 • அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரை வகைகளை  சாப்பிட்டால்

நட்ஸ்:

 • முந்திரி, பாதாம், வால்நட் சாப்பிடலாம்.

அசைவ உணவு:

 • நாட்டுகோழி முட்டை மற்றும் கடல் மீனான மத்தி மீனை சாப்பிடலாம்.

டீ வகைகள் :

 • பட்டை தூள் டீ,ஆவராம்பூ டீ,புதினா டீ,நாட்டு சர்க்கரை டீ,நெல்லிக்காய் டீ,போன்ற டீ வகைகளை குடிக்கலாம்.

உடற்பயிற்சி:

 • காலையில் சிறிது  நேரமும் மாலையில் சிறிது  நேரமும் உடற்ப் பயிற்ச்சி செய்தால் சர்க்கரை நோய்யயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்

சர்க்கரை நோயின் இயற்கை மருந்துவ குணங்கள்:-

ஏராளமான மூலிகை செடிகள் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகின்றது. நம் கண் முன்னே கிடைக்கும் மூலிகைகளின் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.வெந்தயம்:

 • வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

ஆளி விதை:

 • ஆளி விதையிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. ஆளி விதையை சர்க்கரை நோயாளிகள் டயட்டில் சேர்த்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவை வேகமாக குறைக்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

 • எனவே ஆளி விதையை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுங்கள்.

ஆவாரம் பூ:

 • ஆவாரம் பூவை கூட்டு அல்லது பொரியலாக செய்து சாப்பிடலாம். அல்லது அந்த பூக்களை வேகவைத்து அந்த நீரை பருகலாம்.

 • ஆவாரம் பூ பொடியை தண்ணீர் பொட்டு கொதிக்க வைத்து பின் வடிகட்டி பருகவும் இதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

பாகற்காய்:

 • பாகற்காய்பொடியை காலை மற்றும் இரவு நேரங்களில்  இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும்.

நாவல் பழம்:

 • நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. நாவல் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

 • நாவல் பழக் கொட்டை பொடியை தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.

 • நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்குகிறது.

நெல்லிக்காய்:

 • இதில் பாலிபீனால் (Polyphenol) சத்து நிறைந்து இருக்கிறது. இது, இன்சுலின் உறிஞ்சப்படுவதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

 • தினமும்  நெல்லிக்காய்  பொடியை தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.

கறிவேப்பிலை :

 • இது இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது . தினசரி கறிவேப்பிலை பொடியை தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் உண்டுவந்தால், பரம்பரை சர்க்கரைநோயையும், உடல்பருமனால் ஏற்படும் சர்க்கரைநோயையும் முழுவதுமாகத் தடுக்கலாம்.

பட்டை :

 • தினசரி 1-6 கிராம் பட்டைப் பொடியை 40 நாட்களுக்கு உட்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு 18-29 சதவிகிதம் குறையும். ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.

திணை :

 • திணையில் வளமான அளவில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், வயிறு விரைவில் நிறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

 • ஆகவே சர்க்கரை நோய் உள்ளவர்களை, காலையில் திணை கஞ்சி செய்து குடிக்கவும். இது மிகச்சிறப்பான காலை உணவாக அமையும்.

மூலிகை மருந்துவ குணங்கள்:-

 • அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை , மருதம்பட்டை மூன்றையும் காய்ச்சி கஷாயம் செய்து குடித்தால்  நீரிழிவு நோய் குணமாகும்.

 • வில்வ இலையை பொடி செய்து காலை வெறும் வயிற்றில் அரை கரண்டி அளவு வாயில் போட்டு தண்ணீர் அருந்த சர்க்கரை நோய் குறைவாகும்.

 • தினமும் ஒரு கோவைப் பழம் சாப்பிட்டு வந்தால்  சர்க்கரை நோய் குறைவாகும்.

 • நீரில் துளசி இலை, வில்வ இலை மற்றும் வேப்பிலைகளை போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி காலையில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் குறையும்..

 • மஞ்சள், நெல்லி பொடி இரண்டையும் சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

 • சிறியா நங்கை இலைப்பொடி, நெல்லிப்பொடி,  முள்ளிப்பொடி, நாவல் கொட்டை, வெந்தயப்பொடி, சிறு குறிஞ்சான் இலைப்பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து  ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

 • வெண்டைக்காயை இரவு முழுவதும் ஊறவைத்த தண்ணீரை காலையில்  வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.