கோலமாவு'க்குள் இருக்கு கோகிலாவின் கதை! - நயன்தாராவின் 'கோகோ' எக்ஸ்க்ளூசிவ்

Details


'கோலமாவு கோகிலா'. 'டைட்டில் ஹியூமரா இருக்கே'னு கேட்கிறாங்க. 'லோக்கலா இறங்கிப் பேரு வெச்சிருக்கீங்களே'னுகூட கேட்டாங்க. 'அந்த' மாதிரிப் படமா மச்சி'ன்னு கலாய்ச்சாங்க. எனக்கு மட்டுமில்ல, நயன்தாராவுக்குமே இந்தப் பெயர் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. முதன்முறையா அவங்ககிட்ட டைட்டிலைச் சொன்ன செகண்ட், 'குபுக்'னு சிரிச்சுட்டாங்க''

உற்சாகமாகச் சிரிக்கிறார், நெல்சன். நயன்தாரா நடிப்பில் வரும் சம்மரில்

ரிலீஸாகவிருக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர். சிவகார்த்திகேயன்,

சந்தானம் வரிசையில் விஜய் டிவியிலிருந்து கோலிவுட்டுக்கு வரும் அடுத்த

முகம். விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களை இயக்கி வந்தவர், சினிமாவில்

தெரிந்துகொள்ள வேண்டிய கிரவுண்ட் லெவல் தொழில்நுட்பங்களை அங்கிருந்தே

கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார். நடிப்பில் சிவகார்த்திகேயனும், சந்தானமும்

முத்திரை பதித்ததுபோல், இயக்கத்தில் நெல்சன் முத்திரை பதிப்பாரா என்கிற

எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. காரணம் அறிமுகப்படமே நயன்தாராவின்

படமாக இருப்பதால்.

''காலங்காலமா ஹீரோக்களை மையப்படுத்தியே சினிமாக்கள் வந்துக்கிட்டு

இருக்கு. ஏன்... என்னோட முதல் முயற்சியுமே அப்படித்தான் இருந்தது. சிம்பு

நடிக்க நான் தொடங்கிய 'வேட்டை மன்னன்' காரணமே கண்டுபிடிக்க முடியாம

பென்டிங்ல இருக்கு. ட்ராப் ஆகிடுச்சுனு சொல்ல மாட்டேன். 'வேட்டை மன்னன்'

மறுபடியும் வேட்டையாட வரலாம். வரும்போது வரட்டும்னு அந்த முயற்சியை

அப்படியே விட்டுட்டு, பெண்களை மையப்படுத்தின படங்கள் பக்கம் வந்தேன்.

அதுலேயும் ஒரு ஃபார்முலா இருந்துச்சு. அந்த ஃபார்முலாவை விட்டு வெளியே

வந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சி, டெவலப் பண்ண கதைதான், 'கோலமாவு கோகிலா'.

ஏற்கெனவே 'வல்லவன்' படத்துல கொஞ்சநாள் நான் வொர்க் பண்ணப்போ, நயன்தாரா

மேடம் எனக்குத் தெரியும். அதனால என் மனசுல முதல்ஆளா அவங்கதான் நின்னாங்க.

கதை சொல்லப் போனேன். முழுசாக் கேட்டு முடிச்சதும், 'டைட்டில் என்ன'னு

கேட்டாங்க. நான் சொன்னதும், ஒரு நிமிஷம் கேப் விட்டுச் சிரிச்சுட்டாங்க.

பிறகு 'நல்லாதானே இருக்கு'ன்னாங்க. கதை கேட்டதால அவங்களால அந்தத் தலைப்பை

ஏத்துக்க முடிஞ்சது. படத்துல நுழைஞ்சிட்டா, இடைவேளைக்கு முன்னாடியே பெயர்க்

காரணம் தெரிஞ்சிடும். அதனால வம்படியாவோ, பேசப்படணும்னோ இந்தத் தலைப்பை

நான் வைக்கலை. நயன்தாரவே ஓகே சொன்ன பிறகு மாத்தி

யோசிப்போமா... இப்படித்தான் டைட்டில் கன்ஃபார்ம் ஆச்சு'' - 'கோகோ' டைட்டில்

பிறந்த கதையைச் சொன்னார், நெல்சன்.

படம் ரிலீஸாக இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம். அதற்குள் டைட்டில்

எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. இணையதளங்களில் ஆளாளுக்குப்

பேசத்தொடங்கி விட்டார்கள். 'நயன்தாரா பழைய ராமராஜன் படத்து கௌதமிபோல

குளித்து முடித்து ஈரத்தலை, துண்டோடு அதிகாலையில் கோலம் போடுகிறார்' எனச்

சொல்கிறார்கள். 'நயன் பங்கேற்கிற கோலப்போட்டி படத்தில் உள்ளது'

என்கிறார்கள். இப்படி நிறைய கதைகள். 'கோலாமாவுக்கும், கோகிலாவுக்கும் என்ன

தொடர்பு?'

கோலாமாவு படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக வருகிறது. ஸ்மக்லிங் ஆட்களுடன்

ஏதோவொரு சூழலில் இணையும் நயன்தாரா, அந்தச் சூழலை அவர் எப்படி ஹேண்டில்

செய்து, அதிலிருந்து மீண்டு வருகிறார்... என்பதைத்தான், பல ட்விஸ்டுகளுடன்

இந்தப் படத்தில் கதையாகச் சொல்கிறார்கள்.

நன்றி விகடன்

Latest News